/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையோர ஆக்கிரமிப்பு - வாகனங்களால் சென்னிமலையை வதைக்கும் போக்குவரத்து நெரிசல்
/
சாலையோர ஆக்கிரமிப்பு - வாகனங்களால் சென்னிமலையை வதைக்கும் போக்குவரத்து நெரிசல்
சாலையோர ஆக்கிரமிப்பு - வாகனங்களால் சென்னிமலையை வதைக்கும் போக்குவரத்து நெரிசல்
சாலையோர ஆக்கிரமிப்பு - வாகனங்களால் சென்னிமலையை வதைக்கும் போக்குவரத்து நெரிசல்
ADDED : அக் 14, 2024 05:05 AM
சென்னிமலை: சென்னிமலை பேரூராட்சி பகுதியில், முக்கிய சந்திப்புகளில் எப்-போதும் போக்குவரத்து நெரிசல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்-துள்ளது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: சென்னிமலையில் முக்கிய சாலைகளின் இருபுறமும் டூவீலர், கார்களை நிறுத்துகின்றனர். இதனால் சாலையில் செல்லும் பிறர் பாதிக்கின்றனர். இதுதவிர ரோட்டோர நிறுவனங்கள், கடைகாரர்கள் நடைபாதையை ஆக்கி-ரமித்துள்ளனர்.இவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்துவதால் ஆக்கிரமிப்பு-களை அகற்றாமல் நெடுஞ்சாலை, பேரூராட்சி அதிகாரிகள் மவுனம் காக்கின்றனர். இதை மீறி நேர்மையான அதிகாரிகள் ஆக்-கிரமிப்புகளை அகற்ற சென்றால், தங்களுக்கு தெரிந்த பெரிய தலைகளை வைத்து காய் நகர்த்துகின்றனர். இதனால் அவர்க-ளுக்கு டோஸ் விழ, அவர்களும் ஒதுங்குகின்றனர். இதனால் ஆக்-கிரமிப்பாளர்களின் ஆட்டம் அதிகரிக்கிறது. ஆம்புலன்சுகள் கூட அவசரத்துக்கு மருத்துவமனை செல்ல முடியாத நிலை ஏற்படு-கிறது. நகரில் மாரியம்மன் பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்-களில் சொல்லவே
வேண்டாம்.
வாகன போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகரிக்கிறது. ஒரு சிலருக்காக, ஒட்டுமொத்த மக்களை வாட்டி வதைக்கும் செயல் பல ஆண்டு காலமாக தொடர்வது, மனவேதனையை அதிகரித்-துள்ளது. விடியல் ஆட்சி என்று கூறிக்கொள்ளும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள், சென்னிமலை நகரின் போக்குவரத்து நெரிச-லுக்கு விடிவு காண வேண்டும்.
இவ்வாறு கூறினர்.