/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கண்ணபுரம் மாட்டுச்சந்தையில் கயிறு விற்பனை தொடக்கம்
/
கண்ணபுரம் மாட்டுச்சந்தையில் கயிறு விற்பனை தொடக்கம்
கண்ணபுரம் மாட்டுச்சந்தையில் கயிறு விற்பனை தொடக்கம்
கண்ணபுரம் மாட்டுச்சந்தையில் கயிறு விற்பனை தொடக்கம்
ADDED : ஏப் 09, 2024 02:01 AM
காங்கேயம்;காங்கேயம் அருகே கண்ணபுரத்தில், சித்திரை மாதத்தில் விக்ரமசோழீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா மற்றும் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா சிறப்பாக நடக்கும்.
நடப்பாண்டு விழா வரும், 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கண்ணபுரம் மாரியம்மன் பொங்கல் விழா, 10ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. இதையொட்டி காங்கேயம் இன மாடுகள் சந்தை நடப்பது வழக்கம். இதற்கு கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களிலிருந்து காங்கேயம் இன காளைகள், பசுமாடுகள், கன்றுகள், எருதுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநில விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்க வருவர்.நடப்பாண்டு மாட்டுச்சந்தை பொங்கலுக்கு முன்பே கூடும். இதனால் மாடுகளுக்கு தேவையான கொம்பு கயிறு, மூக்கு கயிறு, சாட்டை உள்ளிட்ட பொருட்களை விற்கும் கடை தற்போது அமைக்கப்பட்டுள்ளது.இன்னும் சில நாட்களில் மாடுகள் வர தொடங்கும். அதன் பின் சந்தை சூடுபிடிக்கும் என்று, வியாபாரிகள் தெரிவித்தனர்.

