/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.39 கோடி மோசடி: நிர்வாக இயக்குனரை கைது செய்ய பெங்களூரு போலீசார் முகாம்

ADDED : ஜூலை 12, 2024 01:43 AM
ஈரோடு, ஈரோட்டில் முனிசிபல் காலனியில் யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், நசியனுார் சாலையில் ஈஸ்ட் வேலி அக்ரோ பார்ம்ஸ் நிறுவனமும், 2017ல் துவங்கப்பட்டது. நிர்வாக இயக்குனராக ஈரோடு, இடையன்காட்டு வலசு, சின்னமுத்து முதல் வீதியை சேர்ந்த சண்முகம் மகன் நவீன்குமார், 38, செயல்பட்டார்.
பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக புகார் வந்ததால், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுவரை, 263 பேர் புகார் செய்துள்ளனர். 39 கோடி ரூபாய் வரை மோசடி நடந்ததும் உறுதியானது. இவரை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது ஜாமினில் வெளியில் உள்ளார். இதற்கிடையில் பெங்களூரு சட்டம் ஒழுங்கு போலீசார், இவ்விரு நிறுவன மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் நவீன்குமாரை கைது செய்ய நேற்று ஈரோடு வந்தனர்.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது: நவீன்குமாரின் இரு நிறுவனங்களிலும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, அசாம், டில்லி பகுதிகளை சேர்ந்த மக்களும் முதலீடு செய்துள்ளனர். இது தொடர்பான புகாரில், பெங்களூரு போலீசார் தற்போது வந்துள்ளனர். இவ்வாறு கூறினர்.