/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆடு வியாபாரியிடம் ரூ.1.17 லட்சம் பறிமுதல்
/
ஆடு வியாபாரியிடம் ரூ.1.17 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 02, 2024 04:38 AM
கோபி: கோபியில் நடந்த வாகன சோதனையில், ஆடு வியாபாரியிடம், 1.17 லட்சம் ரூபாயை, தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொளப்பலுார் போலீஸ் செக்போஸ்ட் பகுதியில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த மகேந்திரா மினி வேனில், சத்தியை சேர்ந்த சாகுல், 49, வந்தார். ஆடு வியாபாரியான அவரிடம், 1.17 லட்சம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால், குழுவினர் பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பனிடம் வழங்கினர். 'குன்னத்துார் கால்நடை சந்தையில், ஆடுகள் வாங்குவதற்காக பணத்தை கொண்டு சென்றதும் விசாரணையில் தெரிந்தது.

