/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ. 8.74 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்
/
ரூ. 8.74 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்
ADDED : செப் 16, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி அருகே மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விளைபொருட்கள் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 73 மூட்டை எள் வரத்தானது.
வெள்ளை ரகம் கிலோ, 83 முதல் 146 ரூபாய்; கறுப்பு ரகம் கிலோ, 105 ரூபாய் முதல் 158 ருபாய்; சிவப்பு ரகம் கிலோ, 142 ரூபாய் முதல் 149 ரூபாய்க்கு விற்றது. 204 தேங்காய் வரத்தாகி, ஒரு காய் ஒன்பது ரூபாய் முதல், 13 ரூபாய்க்கு விற்றது. தேங்காய் பருப்பு, 19 மூட்டை வரத்தாகி, கிலோ, 82 ரூபாய் முதல், 106 ரூபாய் வரை விற்றது. அனைத்தும், 8.74 லட்சம் ரூபாய்க்கு விலைபோனது.

