/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு ஓட்டு எண்ணிக்கை மையத்தில் எஸ்.பி.,ஆய்வு
/
ஈரோடு ஓட்டு எண்ணிக்கை மையத்தில் எஸ்.பி.,ஆய்வு
ADDED : மே 07, 2024 02:40 AM
ஈரோடு:ஈரோடு லோக்சபா தொகுதி ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் 'சிசிடிவி' கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை, ஈரோடு எஸ்.பி., ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு லோக்சபா தொகுதிக்கான தேர்தல் ஏப்., 19ல் நடந்தது. ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், தாராபுரம், காங்கயம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணிக்கை மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லுாரியில் உள்ள 'ஸ்ட்ராங் ரூமில்' வைத்து பூட்டி சீலிடப்பட்டுள்ளது. ஓட்டு பெட்டிகள் வைத்துள்ள அறை, ஓட்டு எண்ணிக்கை மையத்தை சுற்றியும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், பட்டாலியன் போலீசார், ஆயுதப்படை போலீசார், உள்ளூர் போலீசார் என 4 அடுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 'சிசிடிவி' கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓட்டு பெட்டிகள் வைத்துள்ள 'ஸ்ட்ராங் ரூம்' மற்றும் கேமராக்களை கண்காணிக்கும் 'கன்ட்ரோல் ரூம்' செயல்பாடுகளை மாவட்ட எஸ்.பி., ஜவகர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.