/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் இரண்டு நாள் கைத்தறி கண்காட்சியுடன் விற்பனை துவக்கம்
/
ஈரோட்டில் இரண்டு நாள் கைத்தறி கண்காட்சியுடன் விற்பனை துவக்கம்
ஈரோட்டில் இரண்டு நாள் கைத்தறி கண்காட்சியுடன் விற்பனை துவக்கம்
ஈரோட்டில் இரண்டு நாள் கைத்தறி கண்காட்சியுடன் விற்பனை துவக்கம்
ADDED : ஆக 08, 2024 12:44 AM
ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, சிறப்பு கைத்தறி கண்காட்சி, விற்பனை துவங்கியது.
விற்பனையை துவக்கி வைத்து, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:
கடந்த, 1905 ஆக., 7ல் துவங்கப்பட்ட சுதேசி இயக்க நினைவாகவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தவும் கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில், 190 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், 56 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில், 59,733 கைத்தறி நெசவாளர்கள், 7,550 விசைத்தறி நெசவாளர்கள் உள்ளனர்.
இங்கு நடக்கும் கண்காட்சியில், 27 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், கோ-ஆப்டெக்ஸ், கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் பங்கேற்றுள்ளன. படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், திரைச்சீலை, ஜமுக்காளம், சேலைகள் போன்றவை விற்கப்படுகின்றன.
விற்பனையில் இவற்றுக்கு, 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. நேற்றும், இன்றும் காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை கண்காட்சியில் விற்பனை நடக்கிறது.
இவ்வாறு கூறினார்.
மூத்த கைத்தறி நெசவாளர்கள் எட்டு பேர் கவுரவிக்கப்பட்டனர். ஐந்து நெசவாளர்களுக்கு நெசவாளர் வீடு கட்டும் திட்டத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மானியத்துடன் கூடிய வீடு கட்டுவதற்கான பணி ஆணை, ஐந்து நெசவாளர்களுக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில், 11.25 லட்சம் ரூபாய் மதிப்பில், இ-முத்ரா கடனுதவி வழங்கப்பட்டது.
மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, கைத்தறி உதவி இயக்குனர் தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.