ADDED : ஆக 25, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய் புளியம்பட்டி, ஆக. 25-
புன்செய்புளியம்பட்டி கே.வி.கே.,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி தலைமை தாங்கினார். பி.டி.ஏ., தலைவர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார்.
பள்ளி மேலாண்மை குழுத் தலைவராக வடிவுக்கரசி, துணைத் தலைவராக கோமதி, உள்ளாட்சி பிரதிநிதிகளாக நகர்மன்ற தலைவர் ஜனார்த்தனன், நகர்மன்ற உறுப்பினர் பூர்ண ராமச்சந்திரன் மற்றும் ஆசிரியர் பிரதிநிதியாக வாணி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து, பள்ளி மேலாண்மைக் குழுவினர் பள்ளி வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்தனர்.

