/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்வு
/
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்வு
ADDED : செப் 01, 2024 03:51 AM
ஈரோடு: பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தெரிவு செய்தல் (எஸ்.எம்.சி.,) நிகழ்ச்சி, ஈரோடு எஸ்.கே.சி. ரோடு மாநகராட்சி நடுநிலை பள்ளியில் நேற்று நடந்தது.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரும், கவுன்சிலருமான ரேவதி, கவுன்சிலர் பிரவீனா மற்றும் 34வது வார்டு செயலாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணை தலைவர், சுய உதவிக் குழு உறுப்பினர், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர், முன்னாள் மாணவர், முன்னாள் மாணவர் பெற்றோர் என, 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதே போல் மாநகரில் பல்வேறு அரசு நடுநிலை பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நேற்று நடந்தது.*பெருந்துறை மேற்கு அரசு நடுநிலைப்பள்ளியில், மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நேற்று நடநதது. மாவட்ட கல்வி அலுவலர் பெல்ராஜ் தலைமை வகித்தார். இதில் தலைவராக ராஜலட்சுமி, துணைத் தலைவராக புவனேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் சான்றிதழ் வழங்கினார். முடிவில் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்று, குழு போட்டோ எடுத்துக் கொண்டனர்.