/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமராவதி ஆற்று புதைமணலில் சிக்கிய பள்ளி மாணவன் சாவு
/
அமராவதி ஆற்று புதைமணலில் சிக்கிய பள்ளி மாணவன் சாவு
அமராவதி ஆற்று புதைமணலில் சிக்கிய பள்ளி மாணவன் சாவு
அமராவதி ஆற்று புதைமணலில் சிக்கிய பள்ளி மாணவன் சாவு
ADDED : ஆக 17, 2024 04:01 AM
தாராபுரம்: தாராபுரம், அலங்கியம் ரோட்டை சேர்ந்த ராஜகோபால் மகன் ஜெரோமியா, 16; தாராபுரம் அருகே அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் ௧ படித்தார். நண்பர்களான சக மாணவர்கள் நான்கு பேருடன், நேற்று முன்தினம் மாலை, தாராபுரம் புதிய ஆற்றுப்பாலம் பகுதியில் அமராவதி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது ஆற்றில் மூழ்கி மாயமானார். தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், ௩ மணி நேரம் தேடியும் கிடைக்காத நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் தேடுதல் பணி நடந்தது.
தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா ஜெயசிம்மராவ் தலைமையில், 15 பேர் குழு, காலை 7:00 மணியளவில், தேடும் பணியை துவங்கியது. ஒரு மணி நேரம் தேடியதில், சிறுவன் குளித்த இடத்துக்கு அருகே, 12 அடி ஆழத்தில் மணலில் சிக்கியிருந்த சிறுவன் உடலை மீட்டனர்.  உடலை கண்டு, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அமராவதி ஆற்றில் புதைமணல் உள்ள அப்பகுதியில், ஏற்கனவே பலர் குளிக்க சென்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

