/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வணிக வளாகத்தில் பா.ஜ., நிர்வாகி கடைக்கு 'சீல்'
/
வணிக வளாகத்தில் பா.ஜ., நிர்வாகி கடைக்கு 'சீல்'
ADDED : ஆக 06, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம், காமராஜர் வீதியில் உள்ளது.
இங்கு, 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. எட்டாவது எண் கொண்ட கடையில், பா.ஜ., நிர்வாகி சுப்பிரமணி, பூ வியாபாரம் செய்து வருகிறார். மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல், விரிவாக்கப் பணிக்காக, கடையின் ஒரு பக்க சுவரை இடித்து சேதப்படுத்தியுள்ளார். இதனால் வருவாய் பிரிவு அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைத்தனர். இடித்த சுவரை சீரமைத்து கொடுக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.