ADDED : ஆக 16, 2024 01:03 AM
ஈரோடு, ஈரோட்டில் சிம்லா ஆப்பிள் சீசன் துவங்கியது.
ஈரோடு மாநகரில் ஆண்டுக்கு 8 அல்லது 9 மாதங்கள் வரை வெளிநாட்டு ஆப்பிள்களே அதிகம் விற்பனைக்கு வருகிறது. ஆண்டுக்கு 2 அல்லது 3 மாதங்கள் மட்டுமே சிம்லா ஆப்பிள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்தியாவிலேயே விளைவிக்கப்படும் சிம்லா ஆப்பிள், விலை குறைவானதாகவும், உடல் நலனுக்கு உகந்ததாகவும் உள்ளது. மக்களும் சிம்லா ஆப்பிளை, சீசன் காலத்தில் வாங்கி சாப்பிட்டு மகிழ்கின்றனர். இந்தாண்டு சிம்லா ஆப்பிள் சீசன் தற்போது துவங்கி உள்ளது. வரும் நாட்களில் வரத்து மேலும் பன்மடங்காக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பழ வியாபாரி கூறியதாவது: தற்போது 10, 14 கிலோ என இரண்டு பாக்ஸ்களில் சிம்லா ஆப்பிள் வருகிறது. இதில், 10 கிலோ பாக்ஸ், 2,200 ரூபாயாக உள்ளது. சிம்லா, குளுமணாலி போன்ற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. சீசன் தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினார்.