ADDED : ஜூலை 28, 2024 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தில் தனியார் மண்டப வளாகத்தில், உலக சித்தர்கள் மாநாடு நேற்று தொடங்கியது.
இதையொட்டி காலையில், 5 லட்சம் ருத்ராட்சங்களாலான சிவலிங்கத்துக்கு, விசேஷ பூஜை நடந்தது. சித்தர்கள் பெரிதும் வலியுறுத்தியது உள்ள துாய்-மையா? உடல் துாய்மையா? என்ற தலைப்பில் ஆன்மிக பட்டி-மன்றம் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து துறவிகள், சித்-தர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

