/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடிக்க பணம் தர மறுத்த தாயை தாக்கிய மகன் கைது
/
குடிக்க பணம் தர மறுத்த தாயை தாக்கிய மகன் கைது
ADDED : ஜூலை 09, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்;முத்துார் அருகேயுள்ள பெருமாள்புதுாரை சேர்ந்த காய்கறி வியாபாரி பாப்பாத்தி, 54; இவரின் மகன் கதிரேசன், 32; குடிப்பழக்கம் கொண்டவர். நேற்று முன்தினம் மது குடிக்க, தாயிடம் கதிரேசன் பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுக்கவே கன்னத்தில் அறைந்து கீழே தள்ளினார்.
இதில் கீழே விழுந்த பாப்பாத்திக்கு பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. புகாரின்படி வெள்ளகோவில் போலீசார், கதிரேசனை கைது செய்து, காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.