/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.பி., ஆபீசில் பெண் உள்பட மூன்று பேர் தீக்குளிப்பு முயற்சி
/
எஸ்.பி., ஆபீசில் பெண் உள்பட மூன்று பேர் தீக்குளிப்பு முயற்சி
எஸ்.பி., ஆபீசில் பெண் உள்பட மூன்று பேர் தீக்குளிப்பு முயற்சி
எஸ்.பி., ஆபீசில் பெண் உள்பட மூன்று பேர் தீக்குளிப்பு முயற்சி
ADDED : செப் 03, 2024 03:45 AM
ஈரோடு: அறச்சலுார், வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் அர்த்தநாரி, 93; இவர் மகன் சுப்பிரமணி, 62; இவர் மனைவி ராதிகா, 43; மூவரும் ஒன்றாக வசிக்கின்றனர். அர்த்தநாரிக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை, தான் கொடுத்த கடனுக்கு
ஈடாக, சரவணன் என்பவர் கிரயம் செய்து கொண்டார். ஆனால், பணத்தை கொடுத்து விட்டதாக கூறி, சில தினங்களுக்கு முன் எஸ்.பி., அலுவலகத்தில், அர்த்தநாரி மனு அளித்தார். செப்., ௪ம் தேதி (நாளை) விசாரணை நடத்துகிறோம். அப்போது வருமாறு கூறி போலீசார் அனுப்பியுள்ளனர்.இதற்கிடையில் நேற்று காலை எஸ்.பி., அலுவலகத்துக்கு தனது மகன், மருமகளுடன் அர்த்தநாரி வந்தார். அப்போது ராதிகா மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணெயை தன் மீதும், கணவன், மாமனார் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் மண்ணெண்ணெய் கேனை பறித்து, மூவரையும் அலுவலகத்துக்குள் அழைத்து சென்று விசாரித்தனர்.
'நாளை (செப்.,௪ம் தேதி) அர்த்தநாரி மனு மீது, விசாரணை நடத்தப்படுவதை அறிந்து, அவர் வீட்டின் மீது சரவணன் தரப்பில் கல் எறிந்து, தகாத வார்த்தை பேசியுள்ளனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால், எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்து, தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சரவணனையும் நாளை வரவழைத்து விசாரிக்கவுள்ளோம். இருதரப்பையும் விசாரித்தால் தான் உண்மை தெரியவரும்' என்று, போலீசார் தெரிவித்தனர்.