/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனிப்பிரிவு போலீசார் விரைவில் இடமாற்றம்; தயாராகும் பட்டியல்
/
தனிப்பிரிவு போலீசார் விரைவில் இடமாற்றம்; தயாராகும் பட்டியல்
தனிப்பிரிவு போலீசார் விரைவில் இடமாற்றம்; தயாராகும் பட்டியல்
தனிப்பிரிவு போலீசார் விரைவில் இடமாற்றம்; தயாராகும் பட்டியல்
ADDED : ஜூன் 23, 2024 02:40 AM
ஈரோடு:ஒரே போலீஸ் ஸ்டேஷனில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றி வரும் தனிப்பிரிவு போலீசார், இட மாற்றம் செய்யப்படவுள்ளதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பவானி சப்-டிவிசன் போலீசார் ஒட்டு மொத்தமாக நேற்று முன் தினம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஏற்கனவே தனிப்பிரிவில் இருந்த போலீசார் சீருடை பணிக்கு சென்றுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து தனிப்பிரிவு போலீசாரையும் பணியிட மாற்றம் செய்ய சக போலீசாரிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: மூன்றாண்டுக்கு மேல் இருந்த தனிப்பிரிவு போலீசார் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பவானி சப்-டிவிசன் தனிப்பிரிவு போலீசார் மாற்றப்பட்டுள்ளனர். இனி கோபி, சத்தி, பெருந்துறை போலீசார் மாற்றம் செய்யப்படுவர். ஈரோடு சப்-டிவிசனில் தனிப்பிரிவு போலீசார் சமீபத்தில் தான் இடமாற்றம் செய்யப்பட்டனர். எனவே ஈரோட்டை தவிர, பிற தனிப்பிரிவு போலீசார் அனைவரும் இடமாற்றம் செய்யப்படுவர். இவ்வாறு கூறினர்.