ADDED : ஆக 07, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், 2016-17 முதல், 2021-22 வரையிலான காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகள், ஆவணங்களை சமூக தணிக்கை மேற்கொண்டு, நிறைவு பெற வேண்டி உள்ளது.
இதற்காக வரும், 9ல் சிறப்பு கிராமசபை கூட்டம் மேட்டு நாசுவம்பாளையம், எழுமாத்துார், இச்சிபாளையம், நிச்சாம்பாளையம், குமாரவலசு, குருவரெட்டியூர், சின்னதம்பிபாளையம், ஓடத்துறை, மொடச்சூர், கரட்டுப்பாளையம், கொண்டையம்பாளையம், சிக்கரசம்பாளையம், நல்லுார் என, 13 பஞ்சாயத்துக்களில் நடக்கிறது.