/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநில எறிபந்து போட்டி ஈரோடு அணிகள் அசத்தல்
/
மாநில எறிபந்து போட்டி ஈரோடு அணிகள் அசத்தல்
ADDED : ஆக 05, 2024 01:56 AM
ஈரோடு, மாநில அளவிலான எறிபந்து போட்டி ஈரோட்டில் நடந்தது. இதில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள் பிரிவில், 24 அணிகள், பெண்கள் பிரிவில், 23 அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் போட்டி நடந்தது.
இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் கரூர் அணி, பெண்கள் பிரிவில் கிருஷ்ணகிரி அணி வெற்றி பெற்றது. ஆண்கள் பிரிவில் இரண்டாமிடத்தை ஈரோடு அணி, மூன்றாமிடத்தை கிருஷ்ணகிரி அணி பிடித்தது. பெண்கள் பிரிவில் இரண்டாமிடத்தை ஈரோடு அணி, மூன்றாமிடத்தை சென்னை அணி பிடித்தது. சிறந்த வீரர்களாக ஆண்கள் பிரிவில் ஈரோடு தங்கதுரை, பெண்கள் பிரிவில் கிருஷ்ணகிரி அஸ்வினி தேர்வு செய்யப்
பட்டனர்.
இவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. ஈரோடு மாவட்ட எறிபந்து கழக பொது செயலாளர் பிரபு, இணை செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.