/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒரே இரவில் 7 வீடுகளில் 25 பவுன், ரூ.2 லட்சம் திருட்டு 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துணிகரம்
/
ஒரே இரவில் 7 வீடுகளில் 25 பவுன், ரூ.2 லட்சம் திருட்டு 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துணிகரம்
ஒரே இரவில் 7 வீடுகளில் 25 பவுன், ரூ.2 லட்சம் திருட்டு 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துணிகரம்
ஒரே இரவில் 7 வீடுகளில் 25 பவுன், ரூ.2 லட்சம் திருட்டு 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துணிகரம்
ADDED : செப் 03, 2024 03:58 AM
காங்கேயம்: காங்கேயத்தில், தாராபுரம் சாலையில் உள்ள பாரதியார் நகர், சக்தி நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில், நேற்று அதிகாலை கொள்ளையர்கள் புகுந்தனர். அதிகாலை, 2:00 மணிக்கு பாரதியார் நகர் கண்ணன் வீட்டில், கதவை உடைத்து உள்ளே சென்றனர். பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 20 பவுன் நகையை திருடினர். அதே பகுதியில் பிரபவதி வீட்டில், ஐந்து பவுன் நகை, அருகிலுள்ள செல்வி காலமன் வீட்டின் கதவை உடைத்துள்ளனர். அங்கு பொருட்கள் எதுதும் எடுக்கவில்லை.
சக்தி நகருக்கு சென்ற கொள்ளையர், திவ்யா வீட்டின் பூட்டை உடைத்து, 2 லட்சம் ரூபாய்; அருகிலிருந்த ரவி, ராஜேந்திரன் வீட்டில் கதவை உடைத்துள்ளனர். அங்கு எதுவும் கிடைக்காமல் வெளியே வந்துள்ளனர். அப்போது வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு நாய் குரைத்துள்ளது. இதனால் வீட்டு உரிமையாளர் வெளியே வந்து, மர்ம ஆசாமிகளை பார்த்து சத்தமிட்டுள்ளார். இதை கேட்டு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காங்கேயம் போலீசார் இருவர், மர்ம நபர்களை துரத்தி சென்றுள்ளனர். அப்போது திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட கடப்பாறையை போலீசாரை நோக்கி எறிந்துள்ளனர். ஓட்டம் பிடித்த மர்ம நபர்கள் செம்மகாளிபாளையம் பகுதியில் தோட்டத்தில் புகுந்தனர். அங்கு சத்தம் கேட்டு வெளியே வந்த விவசாயி மீது கற்களை வீசிவிட்டு இருளில் புகுந்து மாயமாகி விட்டனர். ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் கொடுத்த தகவலின்படி காங்கேயம் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், போலீசார் விரைந்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தாவும் சென்றார். திருட்டு நடந்த ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
தகவலறிந்து கோவை மண்டல சரக டி.ஐ.ஜி., சரவணசுந்தர் சென்றார். சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க ஆலோசனை வழங்கினார்.கும்பலை பிடிக்க காங்கேயம் டி.எஸ்.பி., மாயவன் தலைமையில் ஆறு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2017ல் இதேபோல் காங்கேயத்தில் திருப்பூர் சாலையில் ஒரே இரவில் ஐந்து வீடுகளில் கொள்ளை நடந்தது. அதேபோல் மீண்டும் தற்போது நடந்த சம்பவம், மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.