/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானியில் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றாமல் மழைநீர் வடிகால் அமைப்பு
/
பவானியில் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றாமல் மழைநீர் வடிகால் அமைப்பு
பவானியில் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றாமல் மழைநீர் வடிகால் அமைப்பு
பவானியில் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றாமல் மழைநீர் வடிகால் அமைப்பு
ADDED : மே 19, 2024 03:06 AM
பவானி: தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை, முறையாக அகற்றாமல், கான்கிரீட் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
ஈரோடு அருகே பிளாட்டினம் மஹால் முதல் பவானி, மேட்டூர், தொப்பூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் (என்.ஹெச்-544) சாலை அகலப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. சாலையின் இருபுறமும் தலா, 1.5 மீட்டர் விரிவுபடுத்தப்பட்டு, இருபுறமும் நடைபாதையுடன் கூடிய கான்கிரீட் வடிகால் அமைக்கப்படுகிறது. ஆனால் பவானி, காலிங்கராயன்பாளையம், லட்சுமி நகர் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், பணி நடப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு திட்டத்தை செயல்படுத்துவது அடிப்படை நோக்கம், தொலைநோக்கு பார்வையை பாதிக்கிறது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: பவானி, காலிங்கராயன்பாளையம், லட்சுமி நகர் பகுதிகளில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. உதாரணமாக காலிங்கராயன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், ஒரே இடத்தில் 6 அடி வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை அகற்றாமல் கால்வாய் கட்டுகின்றனர். மேலும், திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அதிகாரிகளுக்கு உள்ளது.
மாநில நெடுஞ்சாலையாக இருந்த சாலை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்படுகிறது. இத்திட்டம் ஒரு தொலைநோக்கு திட்டம். இதன் நோக்கம் சிதைக்கப்படாமல் செயல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு கூறினர்.

