/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இலவச வீட்டுமனை பட்டாவுக்கு அளவீடு செய்ய கோரி போராட்டம்
/
இலவச வீட்டுமனை பட்டாவுக்கு அளவீடு செய்ய கோரி போராட்டம்
இலவச வீட்டுமனை பட்டாவுக்கு அளவீடு செய்ய கோரி போராட்டம்
இலவச வீட்டுமனை பட்டாவுக்கு அளவீடு செய்ய கோரி போராட்டம்
ADDED : செப் 05, 2024 03:13 AM
நம்பியூர்: நம்பியூர் தாலுகாவிற்கு உட்பட்ட, கூடக்கரை- செட்டிபாளை-யத்தை சேர்ந்த பொதுமக்கள், நம்பியூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கூடக்கரை செட்டிபாளையம் பகுதியில், 2008ல், 53 பேருக்கு பொது பட்டா வழங்கப்பட்டது. 2018ல் மீண்டும் 118 பேருக்கு அதே பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை இடம் அளவீடு செய்து தரப்படவில்லை. இது குறித்து அதிகாரிகள் முதல் கலெக்டர் வரை பல முறை மக்கள் மனுக்களை வழங்கியுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கை-யிலும் எடுக்கவில்லை. இதுகுறித்து, கூடக்கரை ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. அப்போதும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என கூறி, நேற்று கூடக்கரை செட்டிபாளையம் மக்கள், 50க்கும் மேற்பட்டோர் நம்பியூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் தோல்வி ஏற்பட்டதால், நம்பியூர்--கோபி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். நம்பியூர் தாசில்தார் ஜாகிர் உசேன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், உரிய நடவடிக்கை எடுத்து, நிலம் அளவீடு செய்து தரப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, பொது-மக்கள் போராட்டத்தை கைவிட்டுகலைந்து சென்றனர்.