ADDED : செப் 15, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கொடுமுடி, சின்ன கண்டனுார், வீரப்ப கண்டர் வீதியை சேர்ந்த கட்டட மேஸ்திரி செந்தில்நாதன் மகள் லட்சுமி பிரபா, 18; தனியார் பாலிடெக்னி முதலாமாண்டு மாணவி. இரு தினங்களாக உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்த நிலையில், அடிக்கடி மொபைல்போனில் பேசி கொண்டிருந்தார். இதை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் அறைக்குள் புகுந்து மின் விசிறியில் துாக்கிட்டு கொண்டார். வெகு நேரமாக வராததால், கதவை உடைத்து சென்று பெற்றோர் பார்த்தனர். துாக்கில் தொங்கிய மகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மகளை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு, செந்தில்நாதன் அழைத்து சென்றார். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.