ADDED : ஆக 17, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை யூனியன், சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், சென்னிமலையில் நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார்.
இதில் காங்கேயம் தொகுதிக்குட்பட்ட, 10 ஊராட்சிகள், சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து துறை அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். கூட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு எம்.பி., பிரகாஷ், சென்னிமலை யூனியன் சேர்மேன் காயத்ரி இளங்கோ, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

