/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சின்னம் ஒதுக்கீடு கூட்டம்; பத்திரிகையாளர் வெளியேற்றம்...
/
சின்னம் ஒதுக்கீடு கூட்டம்; பத்திரிகையாளர் வெளியேற்றம்...
சின்னம் ஒதுக்கீடு கூட்டம்; பத்திரிகையாளர் வெளியேற்றம்...
சின்னம் ஒதுக்கீடு கூட்டம்; பத்திரிகையாளர் வெளியேற்றம்...
ADDED : மார் 31, 2024 04:01 AM
திருப்பூர்: வேட்பாளர் சின்னம் ஒதுக்கீடு செய்யும் கூட்டத்தில் இருந்து, பத்திரிக்கையாளர்களை வெளியேற்றியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்திருந்தவர் உட்பட, மூன்று வேட்பாளர் வாபஸ் பெற்றனர். அதன்படி, தேர்தலில் போட்டியிடுவது, 13 வேட்பாளர் என்பது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து, கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில், சுயேச்சை வேட்பாளர்களுக்கு, சின்னம் ஒதுக்கீடு செய்யும் கூட்டம் நடந்தது.
வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள், உளவுத்துறை போலீசார் கூட்டரங்கில் இருந்தனர். இருப்பினும், கூட்டம் துவங்கியதும், கூட்டரங்கில் இருந்த பத்திரிகையாளர்கள் மட்டும் வெளியேற்றப்பட்டனர்.
கரும்பு விவசாயி சின்னம் பெற்ற வேட்பாளர் மனு தள்ளுபடியானதால், தனக்கு அந்த சின்னத்தை ஒதுக்க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கோரிக்கை வைத்தார். ஒரே சின்னத்தை சுயேச்சைகள் பலரும் கேட்டிருந்ததால், குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உருவான நாளில் இருந்து, பல தேர்தல்கள் நடந்துள்ளன. அப்போது, வேட்பு மனு பரிசீலனை மற்றும் சின்னம் ஒதுக்கீட்டின் போது, பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுவர். மாறாக, தற்போதுள்ள மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் கிறிஸ்துராஜ், வேட்புமனு பரிசீலனையின் போதும், சின்னம் ஒதுக்கீட்டின் போதும், பத்திரிகையாளரை அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து அரசியல் கட்சியினர் சிலர் கூறியதாவது: தேர்தல் நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும்; வாக்காளர் சார்பில் பத்திரிகையாளர் பங்கேற்று, தேர்தல் நடவடிக்கை விவரத்தை, வாக்காளருக்கு வெளியிட வேண்டிய தார்மீக கடமையாகிறது.
இருப்பினும், இது வாக்காளருக்கான தேர்தல் அல்ல; வேட்பாளருக்கு மட்டுமானது, தமிழக அரசின் உளவுத்துறைக்கானது என்பது போல் மாவட்ட நிர்வாகம் செயல்படுவது சரியல்ல; பத்திரிகையாளர் உரிமையை பறிக்கும் வகையில் செயல்படக்கூடாது. இதேநிலை தொடர்ந்தால், ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கையின் போதும் வெளிப்படைத்தன்மை இருக்காது.

