/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழ் வளர்ச்சி துறை போட்டி எட்டு மாணவர்களுக்கு பரிசு
/
தமிழ் வளர்ச்சி துறை போட்டி எட்டு மாணவர்களுக்கு பரிசு
தமிழ் வளர்ச்சி துறை போட்டி எட்டு மாணவர்களுக்கு பரிசு
தமிழ் வளர்ச்சி துறை போட்டி எட்டு மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஆக 22, 2024 01:28 AM
தமிழ் வளர்ச்சி துறை போட்டி
எட்டு மாணவர்களுக்கு பரிசு
ஈரோடு, ஆக. 22-
ஈரோட்டில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடந்தது.
ஈரோடு கலைமகள் பள்ளியில் நடந்த பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சு போட்டிக்கு ஆசிரியர்கள் துரைராஜ், யுவராணி, கருப்புசாமி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் இளங்கோ தலைமை வகித்தார்.
குருவரெட்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தீனுகா, தோப்புப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி லத்திகாஸ்ரீ, வலையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழ்க்கனி ஆகியோர் முதல், 3 இடத்தையும், கெட்டிசெவியூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தியாஸ்ரீ, பெருந்துறை ஈரோடு மாவட்ட அரசு மாதிரி பள்ளி ஸ்ரீமுருகன் ஆகிய இருவரும் சிறப்பு இடம் பெற்றனர்.இதில் முதல், 3 இடங்களுக்கு முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாய் மற்றும் சிறப்பு இடத்துக்கு தலா, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது.
கல்லுாரி மாணவ, மாணவியருக்கான பேச்சு போட்டிக்கு பேராசிரியர்கள் இரா.விஸ்வநாதன், நாகராஜன், சரவணகுமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
பெருந்துறை பாரதியார் பல்கலை கழக பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி மையம் அமல்உண்ணிகிருஷ்ணன், ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரி தேன்மொழி, அரச்சலுார் தாரணிப்பிரியா ஆகியோர் முதல், 3 இடங்களை வென்றனர். இவர்களுக்கு முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது.