/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழ்நாடு தன்னார்வ நல குழும 53வது பொதுக்குழு கூட்டம்
/
தமிழ்நாடு தன்னார்வ நல குழும 53வது பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு தன்னார்வ நல குழும 53வது பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு தன்னார்வ நல குழும 53வது பொதுக்குழு கூட்டம்
ADDED : செப் 03, 2024 03:47 AM
ஈரோடு: தமிழ்நாடு தன்னார்வ நல குழுமத்தின், 53வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் பாசம் மூர்த்தி வரவேற்றார். சங்கத்தின் செயல்பாடு மற்றும் பணிகள் குறித்து ஆக்சிம் அப்துல் நாசர் பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் தாசில்தார் சேதுராஜ், ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சந்திரசேகரன், நலக்கல்வியாளர் மாரிமுத்து, வழக்கறிஞர் ராஜேந்திரன், பெடக்ஸ் உறுப்பினர் ஜலாலுதீன் பங்கேற்றனர்.
தொண்டு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தி கொள்ள, தேசிய அளவிலான (லோகோ) இலச்சினையை, மத்திய அரசு உருவாக்கி தர வேண்டும். சிறுதானியங்கள் பயன்பாட்டை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி, பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிடல் வேண்டும். மாநில அரசின் நலத்திட்டங்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக நிறைவேற்றிட முன்வர வேண்டும். அழிந்து கொண்டிருக்கும் நொச்சி, ஆடுதொடா போன்ற மருத்துவ சக்தி வாய்ந்த தாவரங்களை பல்லுயிர் பெருக்கம் செய்து மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க இணை செயலாளர் சந்தியா நன்றி கூறினார். தமிழகம், புதுவையை சேர்ந்த அனைத்து மாவட்ட தன்னா