/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி ௫வது வார்டில் தார்ச்சாலை அமைப்பு
/
மாநகராட்சி ௫வது வார்டில் தார்ச்சாலை அமைப்பு
ADDED : ஜூன் 24, 2024 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;ஈரோடு மாநகராட்சி, ௫வது வார்டுக்கு உட்பட்ட காந்திநகர், ஈ.எம்.எஸ் நகர் உள்ளிட்ட இடங்களில், தார்ச்சாலை அமைக்க, ஜல்லி கொட்டி சமன் செய்தனர். அதன் பிறகு பல மாதமாக சாலை அமைக்கும் பணி நடக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர். இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது.
இதன் எதிரொலியாக, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து காந்தி நகர், ஈ.எம்.எஸ்.நகர் உள்ளிட்ட இடங்களில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர்.