/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
. 23 ஆண்டுகளுக்கு பின் தார்ச்சாலை அமைப்பு
/
. 23 ஆண்டுகளுக்கு பின் தார்ச்சாலை அமைப்பு
ADDED : செப் 12, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, சென்னிமலை டவுன் பஞ்., ஒன்பதா-வது வார்டு மேனேஜர் மளிகை கடை வீதியில், 23 ஆண்டுகளாக தார்ச்சாலை வசதியின்றி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், 15- வது நிதி மானிய குழு நிதியில், ௯.௯௦ லட்சம் ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. சென்னிமலை பேரூர் தி.மு.க., செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். டவுன் பஞ்., தலைவர் ஸ்ரீதேவி அசோக் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் சவுந்தர்ராஜன், வார்டு கவுன்சிலர் சுரேகா ராஜ்குமார், தலைமை எழுத்தர் யசோதா சரணவன் உட்பட பலர் பங்கேற்றனர்.