ADDED : நவ 06, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டீ கடைக்காரர் தற்கொலை
அந்தியூர், நவ. 6-
அத்தாணி அருகே கருவல்வாடிப்புதுாரை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 51; அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். கடன் பிரச்னையால் மன உளைச்சலில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் துாங்கிய பிறகு, வீட்டு வெளியே சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார், உடலை கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

