ADDED : ஜூன் 15, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை : -திண்டுக்கல் மாவட்டம் பழநி, வசந்தம் நகரை சேர்ந்தவர் பிரசன்னா, 35; ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து சென்னிமலைக்கு, பைக்கில் வந்தார். எதிரே காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையத்தை சேர்ந்த பூபதி, 33, பைக்கில் வந்தார். ஈங்கூர் அருகே இருவரின் டூவீலர்களும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரசன்னா இறந்தார். தனியார் மருத்துவமனையில் பூபதி சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.