/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவிலுக்கு சொந்தமான பொருளை மீட்காமல் அறநிலையத்துறை மவுனம்
/
கோவிலுக்கு சொந்தமான பொருளை மீட்காமல் அறநிலையத்துறை மவுனம்
கோவிலுக்கு சொந்தமான பொருளை மீட்காமல் அறநிலையத்துறை மவுனம்
கோவிலுக்கு சொந்தமான பொருளை மீட்காமல் அறநிலையத்துறை மவுனம்
ADDED : ஆக 02, 2024 01:58 AM
ஈரோடு, ஈரோடு, கள்ளுக்கடை மேடு
பத்ரகாளியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தற்போது திருப்பணி நடந்து வருகிறது. கோவில் துாணில் இருந்த பித்தளை தகடுகளை, கோவில் தர்மகர்த்தா பேரன் பிரதீப் எடுத்து சென்று, பழைய பொருட்கள் விற்கும் கடையில், 1.40 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டதாக, ஹிந்து சமய அறநிலையத்துறை ஈரோடு மண்டல இணை ஆணையாளர் பரஞ்ஜோதியிடம், மோகன் என்பவர் புகாரளித்திருந்தார்.
இதன் அடிப்படையில் அறநிலையத்துறை ஆய்வாளர் ஆதிரை தலைமையில், மோகன் மற்றும் பிரதீப், மக்களிடம் விசாரணை நடந்தது. இதில் பித்தளை தகடுகளை, பிரதீப் விற்பனை செய்து, பணம் வாங்கியது உறுதியானது. இதுதொடர்பாக பழைய பொருட்களின் கடை உரிமையாளரிடமும் எழுத்துப்பூர்வமாக அறநிலையத்துறையினர் கடிதம் பெற்றனர். அதை தொடர்ந்து பித்தளை தகடுகளை அதிகாரிகள் மீட்டிருக்க வேண்டும். ஆனால், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமல், அறநிலையத்துறை மவுனம் காப்பது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக, பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.