/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விபத்தில் சிக்கியவருக்கு உதவிய கலெக்டர்
/
விபத்தில் சிக்கியவருக்கு உதவிய கலெக்டர்
ADDED : மே 18, 2024 01:19 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா, ராசிபுரம் பகுதியில் அரசு திட்டப்பணிகளை ஆய்வு செய்ய, நேற்று காலை, நாமக்கல் -- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
காலை, 10:15 மணியளவில் பொம்மைக்குட்டைமேடு தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது, அவ்வழியாக டூவீலரில் சென்றுகொண்டிருந்த, செல்லப்பம்பட்டி, மேற்கு பாலப்பட்டியை சேர்ந்த சதீஷ், 38, விபத்தில் சிக்கி காயமடைந்து வலியால் துடித்துக்கொண்டிருந்தார். அருகிலிருந்தவர்கள், '108' அவசர கால ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த கலெக்டர் உமா, கூடியிருந்த கும்பலை பார்த்து விசாரித்தார்.
பின், விபத்து குறித்து அறிந்தவுடன், உடனடியாக மற்றொரு அரசு வாகனத்தில் உட்கார வைத்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சதீஷூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

