/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மக்கள் பங்கேற்கும் குறைதீர் கூட்டம் மாவட்ட வன அலுவலர் உறுதி
/
மக்கள் பங்கேற்கும் குறைதீர் கூட்டம் மாவட்ட வன அலுவலர் உறுதி
மக்கள் பங்கேற்கும் குறைதீர் கூட்டம் மாவட்ட வன அலுவலர் உறுதி
மக்கள் பங்கேற்கும் குறைதீர் கூட்டம் மாவட்ட வன அலுவலர் உறுதி
ADDED : ஆக 07, 2024 01:23 AM
ஈரோடு,:வனத்துறை சார்பிலான குறைதீர் கூட்டம், ஈரோடு மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வன அலுவலர் குமிளி அப்பாலே நாயுடு தலைமை வகித்து, மனுக்களை பெற்றார்.
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் குணசேகரன் மனு வழங்கி கூறியதாவது: அண்ணா பல்கலை வெளியிட்ட ஆய்வில், 2050ம் ஆண்டுக்குள் தமிழக அளவில், ஈரோடு மாவட்டத்தில்தான் காலநிலை மாற்றத்தால் அதிக பரப்பில் இலையுதிர் காடுகள் பாதிக்கப்படும். காலநிலை மாற்றத்தால் பாலைவனமாதல், குறையும் மண் வளம், அயல் தாவரங்களின் ஆக்கிரமிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே காடுகள் உருமாறியும், அழிந்தும் வரும் நிலையில், இம்மாவட்டத்தில் சிறு, சிறு குன்றுகளையும் இதில் உள்ள காடுகளை அழிக்கின்றனர். சித்தோடு குன்று, திட்டமலை, பச்சைமலை, கோபி ஆண்டவர் மலை என பல அழிக்கப்படுகிறது. குன்றுகளில் சாலை அமைக்கக்கூடாது. அங்குள்ள கோவிலுக்கு படிகள், பாறைகள் வழியாகவே அனுமதிக்க வேண்டும். இயற்கையான குன்றுகளை காக்க வேண்டும்.
அந்தியூர் சமூக ஆர்வலர் நாகேஸ்வரன்: வனத்துறை அதிகாரிகளை தொடர்புடைய மக்கள் சந்திப்பது கடினமாக உள்ளது. மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடைவெளி அதிகமானதால் முரண்பாடு ஏற்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்ட வனச்சரகத்துக்குள் பவானி, அந்தியூர், பர்கூர் உட்பட பல வனப்பகுதிகள் வருவதால், அடுத்த கூட்டம் அந்தியூர், தாமரைக்கரை போன்ற இடங்களில் நடத்தி வேண்டும்.
மாவட்ட வன அலுவலர் குமிளி அப்பாலே நாயுடு: வரும் நாட்களில் குறைதீர் கூட்டம் தாமரைக்கரை போன்ற வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்படும். அங்குள்ள மக்கள் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். வனத்தில் வசிப்பவர்கள் விறகு சேகரிக்க பொதுவாக அனுமதி இல்லை. இருப்பினும் அங்கேயே வசிப்போர், குறிப்பிட்ட இடத்துக்குள் சேகரித்து வருகின்றனர். வனப்பகுதியில் வசிப்போருக்கு இலவசமாகவும், மானியத்துடனும் காஸ் இணைப்பு பெற்று தருகிறோம். குடிநீர் எடுப்பதற்காக வனத்துக்குள் செல்வோரை தடுப்பதில்லை. அதை அறிந்தால், பிற துறை வாயிலாக அல்லது வனத்துறை வாயிலாக நாங்களே, அவர்களுக்கான குடிநீராதாரத்தை ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு கூறினார். ஈரோடு வனப்பகுதியை சேர்ந்த பல்வேறு கிராம மக்கள், தங்கள் பகுதி பிரச்னை குறித்து பேசினர்.