/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மத்திய பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் வீட்டைவிட்டு வெளியேறுவோம் என பிரிவினை பேச்சு
/
மத்திய பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் வீட்டைவிட்டு வெளியேறுவோம் என பிரிவினை பேச்சு
மத்திய பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் வீட்டைவிட்டு வெளியேறுவோம் என பிரிவினை பேச்சு
மத்திய பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் வீட்டைவிட்டு வெளியேறுவோம் என பிரிவினை பேச்சு
ADDED : ஜூலை 28, 2024 03:06 AM
ஈரோடு: மத்திய பட்ஜெட்டை கண்டித்து, தி.மு.க.,வினர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு புறக்கணிக்-கப்பட்டுள்ளதாக கூறி, ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் முன்-னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். ஈரோடு எம்.பி., பிரகாஷ் பேசியதாவது:
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின், 'நாம், 2ம் சுதந்திர போராட்டத்தை சந்திக்கிறோம். தமிழகம் புறக்கணிக்கப்ப-டுவதை வேடிக்கை பார்க்க முடியாது' என்றார். பார்லி., கூட்-டத்தில் 'இண்டியா' கூட்டணி தலைவர்கள்,
எம்.பி.,க்கள் பேசும்போது, பிரதமர் நடுங்குகிறார். அப்படி இருந்தும் மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகாருக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கிவிட்டு, தமிழகம் உள்ளிட்ட எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணித்துள்ளனர்.
இவ்வாறு பேசினார். மாநகர செயலாளர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.
வீட்டைவிட்டு வெளியேறுவோம்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார் பேசியதாவது:
ஒரு குடும்பத்தில், 10 குழந்தைகள் இருந்தால், 10 குழந்தைக-ளுக்கும் ஒன்று போல ஒரு கை அளவு சாப்பாடு வழங்க வேண்டும். அதில் ஒரு குழந்தைக்கு மட்டும், 3 நாளாக சாப்பாடு வழங்கவில்லை. தி.மு.க., அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகள் ஆகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறேன். அக்குழந்தை பசியால் எவ்வாறு வாடும், என்ன நினைக்கும் என பாருங்கள். நான்காவது நாளும் உணவு கிடைக்காவிட்டால், அந்த குழந்தை வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை. இதை பொது கருத்தாக நான் கூறுகிறேன். யாராவது தவறாக, எதையாவது யோசித்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி., கந்தசாமி, மேயர் நாகரத்-தினம், மாநகராட்சி மண்டல தலைவர் தண்டபாணி, நிர்வாகிகள் சச்சிதானந்தம், வீரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
வெயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மேயர் நாகரத்தினம் சற்று களைப்பாகி, மயக்கமடையும் நிலைக்கு வந்து அமர்ந்தார். அவ-ருக்கு தண்ணீர் கொடுத்து, அருகேயிருந்தவர்கள் ஆசுவாசப்
படுத்தினர்.

