/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அதிகாலையில் தீ விபத்து தாராபுரத்தில் பரபரப்பு
/
அதிகாலையில் தீ விபத்து தாராபுரத்தில் பரபரப்பு
ADDED : ஆக 04, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரம் அமராவதி சிலை ரவுண்டானா அருகே, பிரபு என்பவருக்கு சொந்தமான பழைய இரும்புக் கடை உள்ளது. நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் கடையில் தீப்பிடித்து எரிந்தது. கடையில் தங்கியிருந்த ஊழியர் ஆனந்த், தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், 2 மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். ஆனாலும் பழைய வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்பட பல ஆயிரம் மதிப்புள்ள பழைய இரும்பு சாமான்கள் எரிந்து விட்டது. இதனால்
பரபரப்பு நிலவியது.