/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்கால் மதகு சிதிலம் சென்னிமலை விவசாயிகள் வருத்தம்
/
கீழ்பவானி வாய்க்கால் மதகு சிதிலம் சென்னிமலை விவசாயிகள் வருத்தம்
கீழ்பவானி வாய்க்கால் மதகு சிதிலம் சென்னிமலை விவசாயிகள் வருத்தம்
கீழ்பவானி வாய்க்கால் மதகு சிதிலம் சென்னிமலை விவசாயிகள் வருத்தம்
ADDED : ஆக 30, 2024 04:10 AM
சென்னிமலை: சென்னிமலை அருகே தோப்புக்காடு பகுதியில், கீழ்பவானி வாய்க்காலின் நேரடி ஒற்றைப்படை மதகு உள்ளது. இதன் மூலம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, 156 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த மதகு சிதைந்து காணப்படுவதுடன், தண்ணீர் செல்லும் கால்வாய் புதர் மண்டி உடைந்துள்ளது. இதனால் ஆயக்கட்டு பகு-திகளுக்கு போதுமான தண்ணீர் செல்லாமல் விவசாயிகள் சிரமப்-பட்டு வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறிதாவது: கீழ்பவானி வாய்க்காலா பாசனத்துக்கு கடந்த, ௧௫ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், 156 ஏக்கர் நிலங்களுக்கு வந்து சேரவில்லை. இதனால் நெல் பயிரிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிதைந்து கிடக்கும் மதகு மற்றும் கால்வாயை சீரமைக்க, நீர்வளத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இவ்வாறு கூறினர்.