/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாதியில் நிறுத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டம்
/
பாதியில் நிறுத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டம்
ADDED : ஆக 17, 2024 04:02 AM
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில், கல்குவாரி அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து, டி.என்.பாளையத்தில் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடந்தது.
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சாமிநாதன், கோபி ஆர்.டி.ஓ., கண்ணப்பன், கோபி தாசில்தார் கார்த்திக் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கல்குவாரி அமைக்க பலர் ஆதரவு தெரிவித்து பேசினர், ஆனால், சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே சலசலப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பங்களாப்புதுார் போலீசார் சமாதானம் செய்த நிலையில், கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

