/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காவிரி-பவானி ஆறு சங்கமிக்கும் கூடுதுறை கரைகள் தெரியாமல் கடல் போல் காட்சி
/
காவிரி-பவானி ஆறு சங்கமிக்கும் கூடுதுறை கரைகள் தெரியாமல் கடல் போல் காட்சி
காவிரி-பவானி ஆறு சங்கமிக்கும் கூடுதுறை கரைகள் தெரியாமல் கடல் போல் காட்சி
காவிரி-பவானி ஆறு சங்கமிக்கும் கூடுதுறை கரைகள் தெரியாமல் கடல் போல் காட்சி
ADDED : ஜூலை 31, 2024 11:23 PM
பவானி:ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ள கூடுதுறையில், காவிரி-பவானி ஆறுகள் சங்கமிக்கும் இடம் கடல் போல காட்சியளிக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து, 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, காவிரி ஆறு கரைகளை தொட்டபடி பாய்கிறது. இதனால் கரையோர கிராமங்களுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு அம்சமாக, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் திறக்கப்படும் பாசனத்துக்கான நீருடன், மழை நீரும் கலந்து பவானி ஆற்றிலும் அதிகமாக தண்ணீர் வருகிறது. பாசனத்துக்கு செல்லும் தண்ணீர் தவிர, மீதமுள்ள அணை நீரும், மழை நீரும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் அருகே காவிரி ஆற்றுடன் கலக்கும். தற்போது, கோவிலை முழுமையாக தண்ணீர் சூழ்ந்தபடி உள்ளதால், கண் கொள்ளா காட்சியளிக்கிறது.
அதேநேரம், பவானி நகரின் காவிரி கரையை ஒட்டிய பகுதியில் உள்ள, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அப்புறப்படுத்தப்பட்டு, அங்குள்ள அங்கன்வாடி மையம், பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அம்மாபேட்டை, நெரிஞ்சிபேட்டை பகுதிகளில் கரை ஓரங்களில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். படகுகள், டயர்களுடன் தீயணைப்பு மற்றும் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். கரை ஓரங்களில் குளிக்கவும், நீச்சல் அடிக்கவும், மீன் பிடிக்கவும், துணிகள் அலசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில், 41 இடங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் என கண்டறியப்பட்டதில், பவானி பகுதியில் மட்டும், 10க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளதால், அங்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.