ADDED : ஆக 24, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஆக. 24-
கோவை, ஜோதிபுரம், ராஜாஜி நகரை சேர்ந்தவர் சண்முகவேல், ௫௧; மன்னார்குடி - கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார்.
ஈரோடு ஸ்டேஷனில் இரவு, 2:45 மணி அளவில் நின்றபோது பையில் வைத்திருந்த தங்கம் கலந்த நவரத்தின மாலை, நவரத்தின கல் பதித்த மோதிரம், 2 மொபைல் போன் திருட்டு போனது.
அவர் புகாரின்படி விசாரித்த ரயில்வே போலீசார், நெல்லை, ராமசாமிபுரத்தை சேர்ந்த சங்கரபாண்டியனை, 48, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 32,000 ரூபாய் மதிப்பிலான, 2 மொபைல் போன், தங்கம் கலந்த நவரத்தின மாலையை மீட்டனர்.
இவர் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், 22 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

