/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு பஸ்ஸில் பயணித்து ஆய்வு செய்த எம்.எல்.ஏ.,
/
அரசு பஸ்ஸில் பயணித்து ஆய்வு செய்த எம்.எல்.ஏ.,
ADDED : ஜூலை 28, 2024 03:05 AM
அந்தியூர்: பர்கூர் மலையில் கிழக்கு மலையான தாமரைக்கரை முதல் மடம் வரையில் வனச்சாலை உள்ளது. இதில் தாமரைக்கரை முதல் தேவர்மலை வரை, சாலை மேம்பாட்டு பணி தற்போது நடந்து வருகிறது.
மழைக்காலம் துவங்கியுள்ளதால், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்களுக்கு, சரியான நேரத்தில் பஸ் வராததால் பாதிப்படைந்தனர். உரிய நேரத்தில் வனப்பகுதி கிராமங்களுக்கு அரசு பஸ் இயக்க, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்க-டாச்
சலத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து அரசு போக்-குவரத்து அந்தியூர் கிளை மேனேஜர் ரமேஷுடன், எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், தாமரைக்கரை - மடம் வரையிலான சாலை மேம்பாட்டு பணிகளையும், அரசு பஸ் செல்லும் வழித்தடத்-தையும், பஸ்ஸில்
பயணித்து ஆய்வு செய்தார்.

