/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் குறைவு
/
பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் குறைவு
பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் குறைவு
பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் குறைவு
ADDED : மே 07, 2024 02:31 AM
ஈரோடு:பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் கணிசமான குறைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கவலை அளிப்பதாக அமைந்துள்ளது. மொத்தமுள்ள மாநகராட்சி, நகராட்சி பள்ளிகள் 6ல், 681 பேர் தேர்வு எழுதினர். 635 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 93.25 சதவீதம். அரசு பள்ளிகள் 104ல், 9,663 பேர் தேர்வு எழுதி, 9,256 தேர்ச்சி பெற்றனர். 95.79 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் பட்டியல்: கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 90.24 சதவீதம் தேர்ச்சி பெற்றது. கொங்கர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, 93.33, மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 92.31, சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 93.51, குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, 92.66, ஈரோடு வெள்ளோட்டம் பரப்பு அரசு மேல்நிலைப்பள்ளி, 75, சித்தோடு ராயர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, 88.37, ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, 81.73, ஈரோடு நஞ்சப்ப கவுண்டன் வலசு அரசு மேல்நிலைப்பள்ளி, 78.16 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது,
அ.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, 83.97 சதவீதம், குருவரெட்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளி, 85.85 சதவீதம், சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, 91.78 சதவீதம், தாளவாடி மல்லன்குழி அரசு மேல்நிலைப்பள்ளி, 88.89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.