/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'குட்கா'வுடன் பறந்த கார் விரட்டி பிடித்த போலீசார்
/
'குட்கா'வுடன் பறந்த கார் விரட்டி பிடித்த போலீசார்
ADDED : ஜூன் 15, 2024 09:19 AM
காங்கேயம்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு, காரில் குட்கா புகையிலை பொருட்கள் கொண்டு செல்வதாக, காங்கேயம் டி.எஸ்.பி., பார்த்தீபனுக்கு தகவல் கிடைத்தது. இதனால் தாராபுரம் ரோட்டில் வாகன சோதனை நடந்தது. அப்போது வந்த கர்நாடக பதிவெண் கொண்ட ஒரு கார், நிற்காமல் சென்றது.
இதையடுத்து ஊதியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கும் நிற்காமல் சென்றதால், சினிமா பாணியில் போலீசார் காரை துரத்தினர். தாராபுரம் அருகே குட்கா மினி ஆட்டோ மீது மோதி கார் நின்றது. விரட்டி சென்ற போலீசார் காரை சுற்றி வளைத்தனர். காருக்குள் மூட்டை மூட்டையாக, 440 கிலோ குட்கா புகையிலை பொருள் இருந்தது.
காரை ஓட்டி வந்த வேலுார் மாவட்டத்தை சேர்ந்த அருள், 24, என்பவரை ஊதியூர் போலீசார் கைது செய்தனர். காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.