ADDED : செப் 01, 2024 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏல விற்பனையில், 30 கிலோ எடை கொண்ட நாட்டு சர்க்கரை, 3,500 மூட்டை வரத்தானது. ஒரு மூட்டை நாட்டு சர்க்கரை, 1,320 ரூபாய் முதல், 1,420 ரூபாய்; உருண்டை வெல்லம், 3,900 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,400 ரூபாய் முதல், 1,510 ரூபாய்;
அச்சு வெல்லம், 400 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,400 ரூபாய் முதல், 1,440 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தைவிட நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் வரத்து சற்று அதிகரித்தது. நாட்டு சர்க்கரை மூட்டைக்கு, 60 ரூபாய், உருண்டை வெல்லம் மூட்டைக்கு, 100 ரூபாயும், அச்சு வெல்லம் மூட்டைக்கு, 30 ரூபாயும் விலை குறைந்தது.