ADDED : ஜூலை 12, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரத்தை அடுத்த பொன்னாபுரத்தில், தனியார் கார்பன் ஆலை கட்டடம், நீரோடை பகுதியில் கட்டப்படுவதாக கூறி, அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இரு தினங்களுக்கு முன், கட்டட அனுமதியை ரத்து செய்யக்கோரி, ஒன்றிய குழு தலைவர் சசிக்குமாரும் போராட்டத்தில் இறங்கினார்.
இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார், பஞ்., தலைவர் ரேவதிக்குமார் ஆகியோர், போராட்டம் நடந்த இடத்துக்கு நேற்று மாலை சென்றனர். ஒரு வாரத்துக்குள், கட்டட அனுமதி ரத்து செய்வதாக உறுதிமொழி
அளித்தனர்.
அதுவரை கட்டட பணி நிறுத்தி வைக்கப்படும் என வருவாய் துறை அதிகாரிகள் கூறவே, தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்துவதாக போராட்ட குழுவினர் சார்பில் சசிகுமார் கூறினார். இதனால் ஒரு வாரமாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.