ADDED : ஏப் 16, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை:ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள மணல்மேடு வீதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சரவணன், 27; சென்னிமலை அருகே முகாசிபிடாரியூரில் உறவினர் வீட்டில் தங்கி, சிப்காட்டில் ஒரு மில்லில் மிஷின் ஆப்பரேட்டராக வேலை பார்த்தார்.
நேற்று காலை வேலைக்கு பைக்கில் சென்றார். ஈங்கூர் ரயில்வே மேம்பாலம் அருகே எதிரில் மொபட்டில் வந்த மேற்கு வங்க மாநில தொழிலாளி போலோநாத், சாலையின் குறுக்கே ரோட்டை கடப்பதற்காக குறுக்கே திரும்பியுள்ளார். இதனால் பைக் மீது மொபட் மோதி சரவணன் சாலையில் துாக்கி வீசப்பட்டார். அப்போது சென்னிமலை சென்ற டாரஸ் லாரி முன் சக்கரம் சரவணனின் வயிற்று பகுதியில் ஏறி இறங்கியது. பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சரவணன் இறந்தார்.------

