/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'கூட்டணியை தேசிய தலைமை முடிவு செய்யும்' குழப்பம் ஏதுமில்லை; காங்., செல்வபெருந்தகை

ADDED : ஆக 04, 2024 03:47 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை நேற்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பின், நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டுக்காக, மக்களுக்காக போராடிய தீரன் சின்னமலையின் உயிரை ஆங்கிலேயர்கள் எடுத்தனர். அதுபோல, இன்றும் மக்க-ளுக்காக, நாட்டுக்காக போராடுபவர்கள் நசுக்கப்படுகிறார்கள். மக்-களுக்காக ராகுல் குரல் கொடுக்கிறார். அவர் மீது பொய் வழக்-குகள் போட்டு அடக்க முயலும் நிலை தொடர்கிறது. போதை பொருட்கள் நாடு கடந்து, இந்தியாவுக்குள் வருகிறது. இதை யார் தடுக்க வேண்டும் என பார்ப்பதைவிட, மத்திய அரசுதான் தடுக்க வேண்டும். அவர்களிடம்தான் பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் இருக்-கிறது.
தமிழகத்தில் நடந்த அரசியல் கொலை குறித்து, புலன் விசா-ரணை நடக்கிறது. தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூற முடியாது. நாங்கள் எல்லோரும் பாதுகாப்பாகத்தான் உள்ளோம். போலீஸ் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
தி.மு.க., கூட்டணி உடையும் நிலையில் இல்லை. நாங்கள் யாரை நோக்கியும் செல்லும் நிலையிலும் இல்லை. தி.மு.க., கூட்டணி, இந்தியா கூட்டணி வலிமையாக, நேர்மையாக உள்-ளது. தி.மு.க., - காங்., கூட்டணி வலிமையாக உள்ளது. யாரும் பிரிக்க முடியாது. கார்த்திக் சிதம்பரம், இளங்கோவன், நான் என யாரும் கூட்டணியை தீர்மானிக்க முடியாது. எங்கள் தேசிய தலைமை முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.