நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மின் உப கோட்டத்துக்கு உட்பட்ட கஸ்பாபேட்டை துணை மின் நிலைய பகுதியில், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று காலை, 9:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது.
நிர்வாக காரணத்தால், இந்த மின் தடை ரத்து செய்யப்படுகிறது. வழக்கம்போல் மின் வினியோகம் இருக்கும். இதேபோல் அந்தியூர், ஊராட்சிகோட்டை துணை மின் நிலையங்களிலும் இன்று அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.