ADDED : ஜூன் 11, 2024 06:08 AM
ஈரோடு : ஈரோடு சின்னியம்பாளையம், பாரதி நகரை சேர்ந்த திருநங்கை ஆயிஷா பாத்திமா தலைமையில், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் வழங்கிய மனுவில் கூறியதாவது:
மகளிர் உரிமை தொகை அறிவிப்பில், ரேஷன் கார்டில் குடும்ப தலைவியாக உள்ள பெண்களுக்கு தகுதி அடிப்படையில் மாதம், 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அந்த அறிவிப்பில், திருநங்கைகள், விதவை பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நாங்கள் விண்ணப்பித்த நிலையில், அதற்கான பதிலில், 'பெண் உறுப்பினர் இல்லை' என வந்தது. மாவட்ட நிர்வாகம் வழங்கிய சான்றிதழ், எங்களுக்கான பிற ஆவணங்களையும் இணைத்துள்ளோம். தகுதி மற்றும் முதல்வரின் அறிவிப்பு அடிப்படையில், அனைத்து திருநங்கைகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.