ADDED : மார் 29, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர்: நம்பியூர் அருகேயுள்ள திட்டமலை அரசு கலை அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, முத்தமிழ் விழா என முப்பெரும் விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் சூரியகாந்தி தலைமை
வகித்தார்.
வணிக நிர்வாகவியல் துறை தலைவர் யூனஸ் வரவேற்றார். கோவை பாரதியார் பல்கலை பதிவாளர் ரூபா குணசேகரன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பூபதி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினர். வணிகவியல் துறை தலைவர் நாகேந்திரன் நன்றி கூறினார்.

