ADDED : ஆக 04, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம், டி.என்.பாளையம் ஒன்றியம் கணக்கம்பாளையம் பிரிவு, டி.என்.பாளையம், டி.ஜி.புதுார் உள்ளிட்ட பகுதிகளில், தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கணக்கம்பாளையம் பிரிவில் நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவபாலன், அ.தி.மு.க., ஒன்றிய கிழக்கு செயலாளர் ஹரி பாஸ்கர், விவசாய சங்க தலைவர்கள் காவுத் கார்த்திகேயன், சுபி தளபதி, சஞ்சீவ் முருகேஷ் உள்ளிட்டோோர் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.